திருப்பூரில் ரூ.1.2 கோடி மதிப்பிலான துணை மின்நிலையத்தை திறந்து வைத்த ஆட்சியர் வினீத்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 1.2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 16 mva திறன் கொண்ட துணை மின் நிலையத்தின் மூலம் 12கிலோமீட்டர் சுற்றளவுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.



அதன்படி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபாய் 1.2 கோடி செலவில், 16 mva திறன் உள்ள துணை மின் நிலையம் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பயன்பாட்டிற்கு தயாராக உள்ள துணை மின் நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்ட துணை மின் நிலையத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் இன்று ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.



இந்த 16 mva திறன் கொண்ட துணை மின் நிலையம் மூலம் 12கிலோமீட்டர் சுற்றளவுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும். இதில் வீடுகள், தொழில் நிறுவனங்கள் என 6,500 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...