சொந்த இடத்தில் திருச்சபை கட்ட அனுமதி மறுப்பு - ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார், வாக்காளர் அட்டைகளை ஒப்படைத்து கிறிஸ்தவ மக்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் மண்ணரை அருகே சொந்த இடத்தில் திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி மறுப்பதை கண்டித்து, கிறிஸ்தவ மக்கள், ஆதார் வாக்காளர் அட்டைகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அருண் அந்தோணி. சபை போதகரான இவர், அதே பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சபைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியார்பாளையம் பகுதியில் இடம் வாங்கியுள்ளார்.

இதனிடையே, அவர் திருச்சபைக்கான சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளை தொடங்கிய போது, அங்கு வந்த சிலர் சபை கட்டுமான பணிகள் நடந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டுமான பணிகளை தடுத்ததுடன், அருகில் இருந்த அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போதகர் அருண் அந்தோணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சபை கட்டுவதற்கு அனுமதி கோரி கடந்த பல மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடமும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.



இந்த நிலையில் சொந்த இடத்தில் திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதனை கண்டித்தும், கிறிஸ்தவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் செயல்களை கண்டித்தும், பெத்தேல் ஏ.ஜி. சபை போதகர் அருண் அந்தோணி தலைமையில் சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதையும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதையும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...