திருப்பூரில் ஊராட்சி மன்ற தலைவரை ஜாதி ரீதியாக துன்புறுத்தும் வார்டு கவுன்சிலர்கள் - ஆட்சியரிடம் புகார் மனு

உடுமலைப்பேட்டை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவரான சிவகுமாரை, 3 வார்டு கவுன்சிலர்கள் ஜாதி ரீதியாக துன்புறுத்தி பணி செய்ய விடாமல் தடுப்பதாக ஆட்சியரிடம் மனு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர், சிவக்குமார். இவர், இன்றைய தினம் (07.11.2022) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து, மனு ஒன்றை அளித்துள்ளார்.



அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நான் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவன் என்பதால் என்னை 3 வார்டு கவுன்சிலர்கள், தங்களது சுய நலத்திற்காக மிரட்டி துன்புறுத்தி வருகின்றனர்.

மேலும் எனது வேலையை செய்ய விடாமல் தடுக்கும் வார்டு உறுப்பினர்கள் மூன்று பேரும் ஊராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் வேலைகளில் 10 சதவீத கமிஷன் தொகை தங்களுக்கு பெற்று தரும்படி மிரட்டி வந்தனர்.

இதற்கு நான் மறுத்ததால், என் மீது வீண்பழி சுமத்துகின்றனர். மேலும் நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில எனக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூட்டம் நடைபெறாமல் இடையூறு செய்தனர்.

கூட்டம் முடிந்து வீட்டுக்கு சென்றபோது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் என்னை தள்ளிவிட்டு மிரட்டி லெட்டர் பேடை பிடுங்கி, சில வாசகங்களை எழுதி என்னை மிரட்டி கையெழுத்து வாங்கினர்.

அந்த கடிதத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பியதால் என்மீது, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன. அந்த கடிதத்தை நான் எழுதவில்லை என்பதை இந்த மனுவின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊராட்சியில் எந்த பணி செய்ய வேண்டும் என்றாலும் அவர்களிடம் அனுமதி பெற்றே பணிகளை செய்ய வேண்டும் என எச்சரித்து ஜாதி ரீதியாக அவமானப்படுத்தி அச்சுறுத்தி வருகின்றனர்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...