ஒடிசாவை சேர்ந்த 3 கஞ்சா வியாபாரிகள் கைது - கோவை தனிப்படை போலீசார் நடவடிக்கை

கருமத்தம்பட்டி காவல் நிலைய சரகம், கணியூர் வேட்டைக்காரன் குட்டை அருகே வட மாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் ஆய்வாளர், ராஜதுரை தலைமையிலான போலீஸார் 500 கிராம் கஞ்சா வைத்திருந்த மூவரை பிடித்தனர்.



கோவை: கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய சரகம், கணியூர் வேட்டைக்காரன் குட்டை அருகே வட மாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் காவல் ஆய்வாளர், ராஜதுரை தலைமையிலான போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அதே பகுதியில் உள்ள தனியார் மில் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து தனிப்படை விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மூவரும்கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தன.

ஒடிசாவைச் சேர்ந்தபனமாலை கன்கார், திகம்பர் கண்கார், தீபக் பிரதான் உள்ளிட்டோரிடமிருந்த சிறிய பேக்கை சோதனை செய்து பார்த்ததில் கஞ்சா 1/2 கிலோ இருந்துள்ளது. கஞ்சாவை பறிமுதல் செய்ய போலீசார் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...