கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் திடீர் ஆய்வு

பள்ளியின் கட்டிடம், பள்ளி வளாகத்தின் தூய்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சமீரன், பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.



கோவை: கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அண்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், பள்ளியின் கட்டிடம், பள்ளி வளாகத்தின் தூய்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். மேலும் பள்ளியின் கழிப்பறையையும் ஆய்வு செய்தார்.



இதனை தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளிடம் கலந்துரையாடி மகிழ்ந்தார். அங்கு குழந்தைகளுக்கு எவ்வாறு எளிய முறையில் கல்வி கற்றுத்தரப்படுகிறது எனவும் பார்வையிட்டார்.



மேலும் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆசிரியர்களிடம் மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டறிந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...