கோவை தொண்டாமுத்தூரில் வரும் 12 ஆம் தேதி இளைஞர் திறன் திருவிழா - மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள இளைஞர் திறன் திருவிழாவில் DDUGKY, RSETI, TNSDC திட்டங்களின் கீழ் இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.


கோவை: தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) மூலம் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா வரும் நவம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் காரமடை வட்டாரத்தில், வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.

இதில் DDUGKY, RSETI, TNSDC கீழ் நடைபெறும் இந்த இலவச திறன் பயிற்சியில் கலந்து கொள்ள 18 முதல் 45 வயது வரை உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் (ஆண், பெண், இருபாலர்) தகுதியானவர்கள்.

இது பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

DDUGKY திட்டத்தின் கீழ் warehouse supervisor, retail sales associate, Android mobile phone operator, assistant catering manager general duty assistant, sewing machine operator knits, business correspondent and business facilitator ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

RSETI திட்டத்தின் கீழ் beauty parlour management, women's tailor, candle making, pickle and masala powder, costume jewellery, Bee keeping ஆகிய பயிற்சிகள் மற்றும் TNSDC திட்டத்தின் கீழ் IT- It's, Apparel, Automotive, Textile and Handlooms, Healthcare போன்ற sector-ன் கீழ் பயிற்சிகள் நடைபெற உள்ளது.

மேலும் இளைஞர் திறன் திருவிழாவில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவரம், புகைப்படம் மற்றும் இதர தகுதி சான்றிதழ்களுடன் (அசல் மற்றும் நகல்) கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...