கோவை நகரின் பருவநிலை மாற்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான கருத்தரங்கு

கோவை நகரின் பருவநிலை மாற்றப்‌ பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான கருத்தரங்கை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை பந்தப சாலையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நகர காலநிலை மாற்றம்‌ தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. மத்திய அரசின்‌ வீட்டுவசதி மற்றும்‌ நகர்ப்புற விவாக அமைச்சகம்‌ உருவாக்கிய Climate Smart City Assessment Framework என்ற திட்டத்தின்கீழ்‌, கோவை நகரின் காலநிலையைத்‌ பாதுகாக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம்‌ மேற்கொண்டுள்ள முயற்சிகளின்‌ விரிவாக்கமாக இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.



கோவை நகரம் எதிர்கொண்டு வரும் காலநிலை மாற்றப்‌ பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு இந்த கருத்தரங்கம்‌ பயனுள்ள வகையில் அமைந்தது.



கருத்தரங்கில் உரையாற்றிய கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப், தமிழகத்தில்‌ உள்ள அனைத்து நகரங்களும்‌ காலநிலை மாறுபாடுகளை எதிர்கொள்வதாகவும், அதன்‌ தாக்கங்கள்‌ தற்போது நகரங்களில்‌ பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறினார். பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள இது செயல்பட வேண்டிய நேரம்‌ என்றும்‌ குறிப்பிட்டார்.



இந்த கருத்தரங்கில் மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஷர்மிளா, தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வுகள்‌ நிறுவன இணை இயக்குநர் சரஸ்வதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய கண்காணிப்பு பொறியாளர்‌ செந்தில்குமார்‌, நிர்வாக பொறியாளர்‌ லட்சுமணன்‌, துணை திட்ட அலுவலர்‌ செபாஸ்டின்‌, நகாப்புற மண்டல மேலாண்மை ஆலோசகா்‌ லிஜீ, மற்றும் கோவையில்‌ உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள்‌, அரசு சாரா நிறுவனங்கள்‌, கல்வியாளர்கள்‌, வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, தமிழ்நாடு மின்சார வாரியம்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்‌, வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சோந்த 50-க்கும்‌ மேற்பட்ட உறுப்பினர்கள்‌ பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...