கோவையில் அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

கோவையில் அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுடன் 'நாளைய திரன்' நிகழ்ச்சியை, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலர் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் நடத்தி சிறப்பித்தார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசு கேபிள் டிவி பணிகள் குறித்து மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வானது தகவல் தொழில்நுட்ப அரசு முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல் தலைமையில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட அரசு கேபிள் டிவி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் அரசு கேபிள் டிவி யின் தற்போதைய நிலைமை, இதனை மேம்படுத்த செய்ய வேண்டிய செயல்கள், ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதுமையான சோதனைக் கற்றலை வெளிப்படுத்தும் நோக்கில், பல்வேறு கல்லூரி மாணவர்களுடன் 'நாளைய திரன்' நிகழ்ச்சியை, தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலர் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் நடத்தினார்.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பயிற்சி உதவி ஆட்சியர் செளமியா ஆனந்த், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...