கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அடிக்கடி உலா வரும் கரடிகள் - சிசிடிவி காட்சிகளால் பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி அரவேணு பெரியார் நகர் பகுதியில் அடிக்கடி கரடிகள் உலா வருவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் உடனடியாக கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்நிலையில் சமீப காலமாக இந்த தேயிலை தோட்டங்கள் வழியாக கரடிகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி ஊருக்குள் உலா வரும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகின்றன.



குறிப்பாக கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லக்கூடிய பெரியார் நகர் பகுதியில் தொடர்ந்து சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டம் நாள்தோறும் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவேணு பெரியார் நகரில் உள்ள வீட்டுக்குள் இரண்டு கரடிகள் புகுந்து உலா வந்து சண்டையிட்டன. கரடிகள் சண்டையிட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.



இதனிடையே நேற்று மீண்டும் இரண்டு கரடிகள் குடியிருப்பு பகுதியில் உலா வந்தன. இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் கரடிகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...