அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும் - திருப்பூரில் அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை 152ஆல் பணியாளர்கள் பாதிக்கப்படுவதால் அதனை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.



திருப்பூர்: தமிழக அரசு கடந்த மாதம் 22ஆம் தேதி அரசாணை 152 கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த அரசாணை காரணமாக சென்னை தவிர்த்து மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் 35,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் 3,417 பணியிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பணியாளர்கள் பாதிக்கப்படுவதோடு, மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும். இதனால், மாநகராட்சி நிர்வாகம் தனியார் மயமாக்கப்படும் சூழல் ஏற்படும்.



தமிழக அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்வதற்கான அரசாணை 152ஆல் பணியாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், அரசாணை 152ஐ ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...