நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ படிப்பில் முதல் இருளர் சமுதாயப் பெண் - குவியும் பாராட்டுகள்

கோத்தகிரி அருகேயுள்ள தும்பி பெட்டு இருளர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்னும் பெண் நீட் தேர்வு எழுதி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் இருளர் சமுகத்தில் மருத்துவ படிப்பிற்கு முதல் பெண்ணான ஸ்ரீமதியை நீலகிரி கலெக்டர் அம்ரித் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தும்பி பெட்டு இருளர் கிராமத்தைச் சேர்ந்த பாலன், ராதா தம்பதி இவர்களது மகள் ஸ்ரீமதி அங்குள்ள தனியார் பள்ளியில் 2019 ம் ஆண்டில் பிளஸ் டூ முடித்தார்.

பிறகு தனது மருத்துவ கனவை நனவாக்க நீட் தேர்வு எழுதினார். அதில் எதிர்பார்த்த கட்- ஆப் இல்லாததால் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. நீட் தேர்வுக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு படித்தார் .

4 வது முறையாக 2022 நடப்பாண்டு நீட் தேர்வில் 370 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

மாணவி ஸ்ரீமதி இது கூறித்து கூறுகையில், 2019 ம் ஆண்டில் பிளஸ் டூ முடித்தேன். மருத்துவ கனவை நனவாக்க நீட் தேர்வு எழுதினேன். போதிய கட்-ஆப் இல்லாததால் இடம் கிடைக்கவில்லை. வேறு துறையில் சேர்ந்து படிக்க எண்ணம் இல்லை மருத்துவ கனவை நனவாக்கி ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதுதான் என் குறிக்கோளாக இருந்ததால் 4 வது முறையாக நீட் தேர்வு எழுதி 370 மார்க் எடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது என்றார்.



இதன் மூலம் நீலகிரியில் முதல் இருளர் சமுதாயப் பெண் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



கடின உழைப்பால் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவ கனவை நனவாக்கிய ஸ்ரீமதியை இருளர் சமுதாயம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் அவர்களை தொடர்ந்து நீலகிரி கலெக்டர் அம்ரித் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...