நீலகிரியில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் ஒருபோதும் மூடப்படாது - நீலகிரி எம்.பி ஆ.ராசா உறுதி

நஷ்டத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் மூடப்படுவதாக வெளியான வதந்தியால் ஊழியர்களிடையே அச்சம் ஏற்பட்ட நிலையில், மூடப்படாது என திமுக எம்.பி ஆ.ராசா தகவல்.



நீலகிரி: தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் தொழிற்சாலை மூடப்படுவதாக சிலர் வதந்திகளை பரப்பி வந்த நிலையில், தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.



இந்நிலையில் இதுதொடர்பாக நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழக விருந்தினர் மாளிகையில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் தலைமையில், தொழிற்சங்க தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு திமுக எம்.பி ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது,



தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் ஒருபோதும் மூடப்படாது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை வெளியேற்றுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஒருபோதும் அவர்களை வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு கிடையாது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித்தர அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை புனரமைக்க தனியார் நிறுவன மதிப்பீட்டு வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்ப்படும்.

இதனையடுத்து அதற்கான நிதி ஒதுக்கி தேயிலை தோட்ட கழகம் புனரமைக்கப்பட்டு, கூடுதலாக தேயிலை தோட்ட தொழிலாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மை, தலைமை வன பாதுகாவலர் சையது முஜிமில் அப்பாஸ், நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...