கோவையில் இருந்து கேரளா செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி நிறுத்திவைப்பு

கோவையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி கிடைக்காததால் சுற்றுலா பயணிகளுடன் எல்லையில் நீண்ட நேரம் காத்திருந்து 100க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் திரும்பியுள்ளன இதானால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


கோவை: தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு எல்லைகளில் உள்ள போக்குவரத்துறை சோதனை சாவடிகளில் தற்காலிக அனுமதி வழங்குவது வழக்கம்.

இதற்காக வாகன எண்கள் பதிவு செய்யப்பட்டு அதற்கான கட்டணமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இணையதளம் மூலம் இந்த அனுமதிக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தற்காலிக அனுமதி அளிப்பது கடந்த இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டுவிட்டது.

இதனால் கோவை வழியாக கேரளா செல்ல வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு நேரடியாகவே கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்கு வந்து தற்காலிக அனுமதி விண்ணப்பித்தால் கிடைப்பதில்லை என அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் மீண்டும் சுற்றுலா வாகனங்கள் கோவைக்கு திரும்புகின்றனர்.

நேற்று இரவு வரை சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்பிய நிலையில், இன்று சென்ற வாகனங்களுக்கும் தற்காலிக அனுமதி கிடைக்காததால் சுற்றுலா பயணிகளுடன் கோவை - கேரளா எல்லையில் நீண்ட நேரம் காத்திருந்து திரும்ப கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.



வாடகை எடுத்தும் ஓட்ட முடியாமல் கூடுதலாக வாகன ஓட்டிகளும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



இதனால் மீண்டும் சோதனைச் சாவடிகளிலேயே அனுமதி வழங்க வேண்டும் அல்லது இணையதளம் விண்ணப்பித்தால் தற்காலி அனுமதி தாமதமின்றி வழங்க வேண்டும் என வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...