நீலகிரிக்கு ரெட் அலார்ட் - பொழியத் தொடங்கி விட்டது மழை

நீ‌லகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில் கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுகிறது, இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுட்டுள்ளது.



நீலகிரி: வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்ததால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.



இந்த நிலையில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திலும் காலையில் மழை இன்றி காணபட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, மசினகுடி, ஏக்குணி, கல்லட்டி உள்பட கிராம பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் உதகையில் குளிர் நிலவுவதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கபட்டுள்ளது.



உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில் கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுட்டுள்ளது.

இதே போல கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை தொடங்கி பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலார்ட் அறிவித்துள்ள நிலையில் மழை தொடங்கி உள்ளது குறிப்பிடதக்கதாகும்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...