குன்னூரில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தைகள் - வனத்துறை நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை

கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்னூர் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரு சிறுத்தைகள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதி மக்கள் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



கடந்த செப்டம்பர் மாதம் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் தெருக்களில் உலா வரும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இரவு நேரங்களில் வளர்ப்பு நாய்களை வேட்டையாட இந்த சிறுத்தைகள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், சில தினங்களாக அப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.



இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் இரண்டு சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக தெருக்களில் உலா வந்தது, அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், இம்முறை சிறுத்தைகளை வனத்துறையினர் கண்காணித்து அதனை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேன்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...