கனமழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்-போக்குவரத்து பாதிப்பு

கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் குன்னூரில் காலை முதல் தொடர் மழை பெய்து வந்த நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் பாலம் என்னும் இடம் அருகே சாலையின் குறுக்கே 2 மரங்கள் முறிந்து விழுந்தன.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...