கோவையில் நடைபெற்ற 60வது ஜவுளி உற்பத்தி கருத்தரங்கில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி செய்தியாளர்களை சந்திப்பு

சேலத்தில் டெக்ஸ்டைல் பூங்கா 150 ஏக்கர் பரப்பளவில் சுமார் 500 கோடி தயாராகி வருகிறது. இந்தியாவில் ஜவுளி துறையில் குஜராத்திற்கு அடுத்ததாக தமிழகம் உள்ளது என கோவை சித்ரா கூட்டரங்கில் நடைபெற்ற 60வது ஜவுளி உற்பத்தி கருத்தரங்கில் அமைச்சர் ஆர்.காந்தி உரை.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள சித்ரா (SITRA- The South India Textile Research Association) கூட்டரங்கத்தில் 60வது Joint Technological Conference (ஜவுளி உற்பத்தி கருத்தரங்கம்) நடைபெற்றது.



இதனை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வை சித்ரா Farmer chairman சீனிவாசன் தலைமை தாங்கினார். சித்ரா இயக்குநர் வாசுதேவன், சிஐடிஐ சேர்மேன் ராஜ்குமார், இந்திய ஜவுளித்துறை அரசு அதிகாரிகள் உட்பட கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், ஜவுளித்துறை நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



இந்நிக்ழ்வுக்கு பின் செய்தியாளார்களை சந்தித்த தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-

தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடங்களில் ஜவுளித்துறை வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கைகள் குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்களிடம் கேட்டால் அவர்களே கூறுவார்கள்.

ஆட்சி பொறுப்பேற்ற பின் பின்னலாடை நிறுவனத்தாரிடம் அவர்களது குறைகள் கேட்டறியப்பட்டது. பிரதான குறையாக செஸ் வரியை முன் வைத்தனர். அடுத்த இரண்டு மாதங்களில் அது ரத்து செய்யப்பட்டது. ஜவுளி, நெசவு மற்றும் கூட்டுறவுக்கென ஒரே ஆணையர் இருந்த நிலையில் ஜவுளித்துறைக்கென என முதல் முறையாக தனி ஆணையர் நியமிக்கப்பட்டு ஜவுளித்துறை அமைப்புகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு அத்துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

2016 ஆம் ஆண்டு முந்தைய ஆட்சியில் மினி டெக்ஸ்டைல் எனும் திட்டம் கொண்டுவரப்பட்டது. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் சிறிய மில் யூனிட்டுகள் அமைப்பதற்கான திட்டம் அது. 2.5 கோடி வரை அரசு மானியம் வழங்குவதாக அறிவித்தது.

ஆனால் அந்த மானிய தொகையை சாலை அமைப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால் இத்திட்டத்திற்கு பெருமளவு வரவேற்பு இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி ஆய்வு செய்ததில், மானிய தொகையை கட்டடங்கள் கட்டவும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் திட்டத்தில் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு விண்ணப்பதாரர்கள் குறித்து ஆய்வு செய்து திட்டம் அமல்படுத்தப்படும்.

மேலும் தமிழக முதல்வர் சேலத்தில் டெக்ஸ்டைல் பூங்கா அறிவித்து 150 ஏக்கர் பரப்பளவில் சுமார் 500 கோடி மதிப்பிலான திட்டம் தயாராகி வருகிறது. இந்தியாவில் தற்போது ஜவுளி துறையில் குஜராத்திற்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் தமிழகம் உள்ளது.

ஜவுளித்துறை மட்டுமின்றி அனைத்து துறை மேம்பாட்டிற்காகவும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஜவுளி உற்பத்திக்கு அரசு உறுதுணையாக இருக்கும்.

ஜவுளி பயன்பாட்டிற்கான பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரி தமிழக அரசின் வலியுறுத்தலின்படி நவம்பர் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதை நிரந்தரமாக நீக்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதை செய்வதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளோம்.

அனைத்து துறைகளையும் மேம்படுத்தி தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக கொண்டு செல்ல தமிழக முதல்வர் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதை அமைச்சர்கள் நாங்கள் அமல்படுத்தி வருகிறோம்.



இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...