கோவை வடவள்ளி அருகே மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு - பெண் உட்பட இருவர் கைது

வடவள்ளி சின்னமா நகரில் கோவிலுக்கு நடந்து சென்ற மூதாட்டி கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை பறித்துச் சென்ற பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை வடவள்ளி இடையர்பாளையம் சாலை, சின்னமா நகரை சேர்ந்தவர் மாலதி (62). இவர் கடந்த 4 ஆம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக ஹோண்டா டியோ வாகனத்தில் ஒரு பெண்ணும் ஆணும் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், மாலதியின் அருகில் சென்ற அவர்கள் மாலதி அணிந்திருந்த 4 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக மூதாட்டி மாலதி, வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்பகுதியில் இருந்த 20 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது, ஆவாரம்பாளையத்தை சேர்ந்த மகேஸ்வரி (45), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...