மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை - தொடர்ந்து உயரும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்

சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக அணையின் நீர் மட்டம் 39.15 அடியாக உயர்ந்துள்ளது என்றும், விரைவில் 42 அடியை தொடும் என தகவல்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்கி வருகிறது. சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 49.5 அடியாக உள்ளது.

ஆனால் சிறுவாணி அணையில் 45 அடி வரை மட்டுமே நீரை தேக்க வேண்டும் கேரளா நீர் வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த தென் மேற்கு பருவ மழையின்போது இரண்டு முறை சிறுவாணி அணையின் நீர் மட்டம் 46 அடி வரை சென்றது.

அதன் பிறகு மழையளவு குறைந்த நிலையில் நீர் மட்டம் சரியத் துவங்கியது. இந்நிலையில் தற்போது வட கிழக்கு பருவமழை துவங்கியதால் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது.

சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்றிரவு 25 மி.மீ மழையும் மற்றும் அடிவாரத்தில் 21 மிமீ மழையும் பதிவானது. இதனால் மீண்டும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

தற்போது நீர் மட்டம் 39.15அடியாக உயர்ந்துள்ளது, தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் இரண்டு நாட்களில் 42 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...