கோவை மாநகரில் தொடர் கனமழையிலும் எந்த பாதிப்பும் இல்லை - பொள்ளாச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவையில் கடந்தாண்டில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் மழைநீர் தேங்காமல் தடுக்கப்பட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை முன்னிட்டு முதல்நிலை கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் அமைச்சர்கள், செந்தில் பாலாஜி, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஒரு லட்சத்து ஏழாயிரம் தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தந்துள்ளோம். வரும் 27-ம் தேதி பொள்ளாச்சியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.



தமிழ்நாட்டில் வேலை இல்லை என்ற போக்கை மாற்ற தமிழக முதல்வரால் இந்த திட்டம் நடைபெற்று வருகிறது. 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவோம். இந்திய அளவில் கல்வி துறையில் 51% முதன்மை மாநிலமாக உள்ளது.2800 கோடி தொழில் பயிற்சி மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.



இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது, மழையில் பாதிப்பு வரக்கூடாது என்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கோவையில் கடந்த ஆண்டு மழைநீர் தேங்கியது.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்து இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பது. 32 வாய்கால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கும் பகுதி ஆய்வால் பாதிப்புகள் ஏற்படாதபடி தவிர்க்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. ஆட்சியர் தலைமையில் செயல்பாடுகள் உள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் மழை நீர் தேங்காதபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அதிக மழையிலும் பாதிப்பு இல்லை.மோட்டார்கள் தயாராக உள்ளது. அதிக மழை பெய்தாலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பார்வையிடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் எந்த இடங்களிலும் மின்விநியோகம் பாதிப்பு இல்லை.11,000 பேர் மின்வாரியத்தின் மூலம் சிறப்பு பணிகளை மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மின்வாரியம் மற்றும் குழுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இதற்கு காரணம்.கோவையில் வரலாற்றில் இல்லாத மழை பெய்தும் பாதிப்பில்லை. கடந்த பத்தாண்டுகளில் மின் திட்டங்கள் செயல்படுத்தவில்லை.

சிறு, குறு தொழில் நடத்த இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக குறைந்த மின்கட்டணம். மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டில் எந்தவிதமான சாலையும் போடவில்லை.சிறப்பு நிதி 200 கோடியில் 26 கோடி விடுவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திற்குள் பழுதடைந்த சாலைகள் சரி செய்யப்படும்.

கோவையில் தனியார் பள்ளிகள் மாணவர்களின் குறிப்பேட்டில் சாதியை பதிவதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்த அவர், இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு வந்த பிறகு கல்வித் துறையுடன் பேசி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...