கோவை அருகே விளைநிலங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தும் வீடியோ வெளியீடு

கோவை அருகே விளைநிலங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.


கோவை: கோவை ஆனைகட்டி மாங்கரை மலைப் பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்ந்து கதையாகி வருகிறது.

இதனிடையே தடாகம் பகுதியில் கடந்த 1 மாதங்களுக்கு மேலாக கூட்டமாக வரும் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் பன்னிமடையை அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஜெகநாதன் என்பவரது தோட்டத்திற்குள் 2 காட்டு யானைகள் நேற்றிரவு புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.

நாய்கள் குரைத்ததால் வந்த வழியிலேயே யானைகள் திரும்பிச் சென்றுள்ளன. இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...