உதகை வானியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில் சுற்றி திரிந்த 2 சிறுத்தைகள் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

உதகையில் உள்ள மத்திய அரசின் வானியல் ஆராய்ச்சி மைய வளாகத்திற்குள் சுற்றி திரிந்த 2 சிறுத்தைகளின் பரபரப்பு சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.



நீலகிரி: நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.

குறிப்பாக சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள மேல்கவ்ஹட்டி செல்லும் சாலையில் அமைந்டதுள்ள மத்திய அரசின் வானியல் ஆராய்ச்சி மைய வளகாத்திற்குள் நேற்றிரவு 2 சிறுத்தைகள் நுழைந்தன.

பின்னர் அவை அங்குள்ள கதிர்வீச்சு சேகரிப்பு கருவிகள் வழியாக அங்கும் இங்கும் நடந்து சென்று உணவு தேடின. சிறிது நேரத்திற்கு பின்னர் 2 சிறுத்தைகளும் வன பகுதியை நோக்கி சென்றன.

சிறுத்தைகள் சுற்றி திரிந்த வீடியோ காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நிலையில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...