சிறுவாணி அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை - 39.36 அடிக்கு நீர்மட்டம் உயர்வு..!

இன்று காலை நிலவரப்படி, சிறுவாணி பகுதியில் 23 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது. இதையொட்டி, அணையின் நீர்மட்டம் தற்போது 39.36 அடியாக உயரிந்துள்ளது. இதே நிலை நீடித்தால், நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவை எட்டுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணையின் கொள்ளளவு 49.53 அடி வரை ஆகும்.

ஆனால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கேரள அரசின் சார்பில், சிறுவாணி அணையில் 45 அடி அளவு வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது.

இந்த நிலையில், சிறுவாணி அணையின் அனுமதிக்கப்பட்ட முழு கொள்ளளவான 45 அடியை இந்த வருடத்தில் ஆறாவது முறையாக எட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தற்போதய நிலை

சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் அடிவாரத்தில் அடை மழை பொழிந்து வருவதனால், அணை நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, சிறுவாணி அடிவார பகுதியில் 23 மிமீ அளவு மழையும், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 23 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இதையொட்டி, அணையின் நீர்மட்டம் தற்போது 39.36 அடியாக உள்ளது.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், சிறுவாணி அணை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது. இதே நிலை நீடித்தால், மேலும் நீர்மட்டம் உயர்ந்து வரையறுக்கப்பட்ட அணை முழு கொள்ளளவான 45 அடியை எட்ட வாய்ப்புள்ளது.

அவ்வாறு, சிறுவாணி அணை மீண்டும் நிரம்பினால் இந்த வருடத்தில் ஆறாவது முறையாக நிரம்பியதாக கணக்கிடப்படும். இதன் விளைவாக, கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்க முடியும், என்றனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 22 வார்டு பகுதிகளுக்கு, 7 டவுன் பஞ்சாயத்துகள், 10 கிராம ஊராட்சிகளுக்கு சிறுவாணி அணையே குடிநீர் நீர் ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் சுவை மிகுந்த இரண்டாவது குடிநீர், சிறுவாணி நீர் தான். இந்த நீருக்கு என்று ஒரு தனி மவுசு உள்ளது என்றால் அது மிகையாகாது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...