கோவை டி.கே. வீதியில் சமையல் கேஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில தொழிலாளி காயம்

கோவை டி.கே. வீதியில் சமையல் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநில தொழிலாளி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ச பெற்று வருகிறார்.


கோவை: மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவை சேர்ந்தவர் பிஜாய். இவர் கோவை தியாகி குமரன் வீதியில் வாடகை வீட்டில் தங்கி தங்க நகை தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் தங்கியிருந்த வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சமையல் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் வீட்டின் மேற்கூறை உடைந்து சேதமானது.



மேலும் இதில், பிஜாய்க்கு அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.



இதனையடுத்து காயமடைந்த பிஜாயை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்கட்ட விசாரணையில் பிஜாய் சமையல் சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருத்ததே விபத்துக்கான காரணம் என தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...