கோவையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் - குறைகளை முன்வைத்த குடும்பத்தினர்

முன்னாள் ராணுவ வீரர்கள், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுக்கான குறைகளை அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.


கோவை: மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் மற்றும் தக்சின் பாரத் ஏரியா சார்பில் முன்னாள் ராணுவத்தினர், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் கோவை எஸ்.என்.ஆர் கலை அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ராணுவ உயர் அதிகாரிகளிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர்.

இதில் ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் உள்ள குறைகளை முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கைகளாக முன் வைத்தனர்.

இந்த குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் குமார், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...