இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனமக்கள் தங்களுக்கு அரசின் இலவச மனை வழங்கும் திட்டத்தின் மனை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த நரிகுறவர் இன மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுதொடர்பாக நரிக்குறவர் இன மக்கள் அளித்த மனுவில், 35 ஆண்டுகளாக சுண்டக்காமுத்தூர் எம்ஜிஆர் தோட்டம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் இங்கு இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வசித்தால் தங்களுக்கும் அங்குள்ளவர்களுக்கும் இடையூறாக இருக்குமென்பதால் தங்களுக்கு தனி மனை இடம் ஒதுக்கித் தர வேண்டும்.



சுமார் 35 குடும்பங்கள் மனை இன்றி வாழ்ந்து வருவதால் தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மனை வழங்கும் திட்டத்தின் கீழ் தங்களுக்கும் இலவச மனை ஒதுக்கி தர வேண்டும்.



இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...