கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உடனடியாக மின் மயானம் அமைக்க வேண்டும் - ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைக்கப்பட உள்ள மின் மயானத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் மின் மயானம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.



இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த மின் மயானத்தை உடனடியாக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைக்க வலியுறுத்தி ஒத்தக்கால் மண்டபம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பிரிமியர் மில்ஸ் மற்றும் ஒக்கிலிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.



மனு அளிக்க வந்த மக்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு முழக்கங்களையும் எழுப்பினர்.



இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள் அப்பகுதியில் மின் மயானம் வேண்டும் என்பது தங்களது பல நாள் கோரிக்கைகளாக உள்ளது. தற்போது இதனை உடனடியாக அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மின் மயானம் அமைய உள்ள அந்த குறிப்பிட்ட இடத்தை சுற்றியுள்ள மக்கள் அந்த இடத்தில் மயானம் அமைக்க கூடாது என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...