கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குழந்தைகள் தின கொண்டாட்டம் - குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி உற்சாகம்

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேரு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், ராஜஸ்தான் எம்.எல்.ஏ மதன் பிரஜாபத் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், இனிப்புகளை வழங்கினார்.



கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.



இதில் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் மதன் பிரஜாபத் கலந்து கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களையும் இனிப்புகளையும் வழங்கினார்.



மேலும் இந்த நிகழ்வில், ஜவஹர்லால் நேருவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...