குன்னூர் அருகே கனமழையால் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிராமப்புற சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுவதும் மண் சரிவு ஏற்படுவதுமாக உள்ளது. மண் சரிவை அகற்றி சீரமைக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



நீலகிரி: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 24மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் பரவலாக உள்ளது. குறிப்பாக குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் மழையின் தாக்கம் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிராமப்புற சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுவதும் மண் சரிவு ஏற்படுவதுமாக உள்ளது.

அவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பாக உடனடியாக மீட்டு வரும் நிலையில் பணியில் ஈடுபட்டுள்ளது.



இந்நிலையில் குன்னூரில் இருந்து ஆனைபள்ளம் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உலிக்கல் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் அதிகாரிகள் Jcp உதவியுடன் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...