உதகையில் நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் உதகையில் நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.



நீலகிரி: ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கபட்டு வருகிறது. எய்ட்ஸ் நோயை கட்டுபடுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் கடைபிடிக்கபட்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.



அந்த வகையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில்,நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.



எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொடர்பாக கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நாடகங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தபட உள்ளது.



இந்நிகழ்ச்சியானது வரும் 23-ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மலை கிராமங்களிலும் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் நடத்தப்படுகிறது. பொதுமக்கள், எய்ட்ஸ் நோய் குறித்து தெரிந்து கொள்வதற்கும், எச்.ஐ.வி பற்றிய பயம் விலகிடவும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட மக்களை ஒதுக்குதல்- புறக்கணித்தல் போன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கும், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்நிகழ்ச்சி நடத்தபடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட மேலாளர் திரு.அறிவழகன், ஆய்வக நுட்பனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...