தீபாவளி பலகார சீட்டு நடத்தி வட்டிக்கு விட்ட பணம் திருப்பி கிடைக்காததால் விரக்தி - கோவையில் தாய்,மகள் தற்கொலை செய்த சோகம்

சூலூரில் தீபாவளி பலகார சீட்டு நடத்தி வட்டிக்கு விட்ட பணம் திரும்பி கிடைக்காத விரக்தியில் தாய்,மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: சூலூர் அருகே உள்ள அம்மாள் கோவில் பிள்ளையார் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் காந்தரூபன்.ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அவர் தான் ஏற்கனவே வசித்த பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு நடத்திய சீட்டில் கிடைக்க பெற்ற பணத்தை காந்தரூபனின் மனைவி பழனியம்மாள் வட்டிக்கு விட்டதாக கூறப்படுகிறது. அந்த பணம் தீபாவளி சமயத்தில் திரும்ப கிடைக்காத காரணத்தினால் சீட்டு போட்ட அனைவரும் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.

இதனால் மனவேதனையில் மூவரும் இருந்ததாக கூறப்படுகிறது.பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டுக் நச்சரித்து வந்ததால், விரக்தி அடைந்த காந்தரூபன் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.



இதில் மனைவி, மகள் பரிதாபமாக உயிரிழக்க, காந்தரூபன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...