பந்தலூர் அருகே தேயிலை தோட்ட தொழிற்சாலைக்குள் நுழைந்த யானைகள் - அச்சத்தால் ஓட்டம்பிடித்த தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேயிலை தோட்ட தொழிற்சாலைக்குள் மீண்டும் காட்டு யானைகள் நுழைந்த நிலையில், அவற்றை கேரள வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேன்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: பந்தலூர் பகுதியானது கேரள வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டங்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வர தொடங்கியுள்ளன. அவ்வாறு வரும் யானை கூட்டங்கள் அடிக்கடி அரசு தேயிலை தோட்டத்திற்குள்ளும், தொழிற்சாலை பகுதிக்குள்ளும் வருவது வாடிக்கையாக உள்ளது.



இந்நிலையில் கூடலூர் - கேரளா மாநில இணைப்பு பகுதியில் இருக்கக்கூடிய இலியாஸ் கடை பகுதிக்கு ஒரு குட்டியுடன் இரண்டு பெண் யானைகள் புகுந்தன.



அங்கிருந்த புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த அந்த யானைகள் பின்னர் மெதுவாக அருகே உள்ள அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்தன.



யானைகளை பார்த்த தொழிலாளர்கள் தேயிலை பறித்து கொண்டு இருந்த சக தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்க அச்சமடைந்த தொழிலளர்கள் உடனடியாக அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

யானை கூட்டத்தை கேரள வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...