மழை நீரால் சூழப்பட்ட வீட்டில் 3 நாட்களாக தவிக்கும் 80 வயது மூதாட்டி - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை அருகே மழை நீர் புகுந்த வீட்டில் 3 நாட்களாக வெளியேற முடியாமல் தவித்து வரும் 80 வயது மூதாட்டியை உடனடியாக மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாகுல் அமீது. இவரது வீட்டின் அருகே அமைந்துள்ள மற்றொரு குறுகிய வீட்டில் அவரது தாய் பாத்திமுத்து என்ற 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டிலிலேயே அவர் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.



இந்நிலையில் மூதாட்டி இருக்கும் வீடு தாழ்வான பகுதி என்பதால் வீட்டிற்குள் மழை நீர் புகுந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. வீட்டின் மேற்கூரையும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. ஆனால் மூதாட்டியை வெளியே அழைத்து வர அவரது மகன் உள்ளிட்ட யாரும் முன் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டின் சுவர் இடிந்து அவர் உள்ளே சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கடந்த மூன்று நாட்களாக மழை நீரால் சூழப்பட்ட வீட்டில் அவர் பரிதாபமாக தவித்து வரும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக மூதாட்டியை மீட்டு உரிய சிகிச்சையளித்து உதவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...