கோவையில் ட்ரோன் கேமராக்கள் மூலமும் இனி குற்றங்கள் கண்காணிக்கப்படும் - மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவிப்பு

டி.ஜி.இன்ஸ்டியூட் ஆப் ட்ரோன்ஸ் சார்பாக கோவை காவலர்களுக்கு ட்ரோன் கேமரா பயன்படுத்துவது எப்படி என்கிற பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பாராட்டி மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.


கோவை: கோவையில் தொடர் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் அது போன்று இனி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காகவும் கோவை மாநகரில் குற்ற சம்பவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளார்.

அதன்படி கோவை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சியாக ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பாக காவலர்களுக்கு டி.ஜி.இன்ஸ்டியூட் ஆப் ட்ரோன்ஸ் சார்பாக இரண்டு நாள் பயிற்சி முகாம் கோவையில் நடைபெற்றது.



இப்பயிற்சியில் ட்ரோன் கேமராக்களை சரியான முறையில் இயக்குவதற்கும், அது தொடர்பான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது சார்ந்தும் மாநகரில் இருபது காவலர்களுக்கு தேர்ந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிலையில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு கோவை காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-

கோவை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை கண்காணிப்பதற்கு ட்ரோன் கேமராக்கள் அதிக அளவில் பயன்படுவதாக குறிப்பிட்டார்.

ட்ரோன் கேமராவில் உள்ள அப்ளிகேஷன்கள் மற்றும் புதிய வகையிலான நவீன ட்ரோன்களை கையாளும் விதம் குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் இதனால் காவல் துறையினரின் சில இடங்களில் செல்ல முடியாத இடங்களுக்கும் இந்த தொழில் நுட்பம் வாயிலாக செயல்பட முடியும் என்றார்.

மேலும் தற்போதைய நவீன தொழில் நுட்பத்தில் ட்ரோன் கேமரா பயன்பாடு காவல் துறையில் அதிகரித்து வருவதால் இது தொடர்பான பயிற்சிகளை இன்னும் கூடுதல் காவலர்களுக்கு வழங்க உள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்வாறு மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...