நீலகிரி உதகை அருகே பெயர் மாற்று சான்றிதழ் வழங்க ரூ.1,800 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 7 ஆண்டுகள் சிறை

பெயர் மாற்று சான்றிதழ் வழங்க ரூ.1800 ரூபாய் லஞ்சம் வாங்கிய கீழ்குந்தா பேரூராட்சி இளநிலை பொறியாளர் ஜெயலட்சுமிக்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பள்ளிமனை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார். இவர்தனது தொழிலாளர் குடியிருப்புக்கு பெயர் மாற்று சான்றிதழ் வழங்க கோரி கீழ்குந்தா பேரூராட்சியின் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த ஜெயலட்சுமி என்பவரை அணுகியுள்ளார்.

இந்நிலையில் பெயர் மாற்று சான்றிதழ் வழங்குவதற்காக சிவக்குமாரிடம் ஜெயலட்சுமி 1800 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சிவக்குமார் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் தெரிவித்த நிலையில், ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து ஜெயலட்சுமியிடம் கொடுக்க செய்தனர்.

அப்போது மறைந்திருந்தலஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக ஜெயலட்சுமியை பிடித்து கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை உதகையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதரன், லஞ்சம் கேட்டதற்காக 3 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், லஞ்சம் பெற்றதற்காக 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் என மொத்தம் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமாகவிதித்து தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து,இளநிலை பொறியாளரான 60 வயதான ஜெயலட்சுமி, கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...