நீலகிரி கூடலூர் அருகே உப்பட்டி சாலையில் உலா வந்த சிறுத்தை - வாகன ஓட்டிகள் அச்சம்

கூடலூரில் இருந்து பந்தலூர் செல்லும் உப்பட்டி சாலையில் உலா வந்த சிறுத்தை ஒன்று வாகனத்தை கண்டதும் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பரவி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனால் அப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் தேயிலை தோட்டங்களில் சிறுத்தைகள் அதிகமாக நடமாடுவதுடன் குடியிருப்பு பகுதிகளுக்கும் வருகின்றன. இந்நிலையில் பந்தலூரில் இருந்து உப்பட்டி செல்லும் பிரதான சாலையில் சிறுத்தை ஒன்று வாகனத்தை கண்டவுடன் சாலையைக் கடந்து அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்கு சென்றது.



இதனால் வனப்பகுதியை ஒட்டிய தேயிலை தோட்டங்களில்அடிக்கடி நடமாடும் சிறுத்தையால் தேயிலை தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...