தவறான சிகிச்சையால் சென்னையில் கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு - அரசு பொறுப்பேற்க வானதி ஶ்ரீனிவாசன் வலியுறுத்தல்..!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவதுடன், தமிழக அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஶ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா, அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன் வலது கால் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கிருந்த இரு மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அந்த மருத்துவர்கள் தொலைதூர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரியாவின் இறப்பிற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானத்தை சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சிகிச்சைக்கு வந்திருப்பவர் கால்பந்தாட்ட வீராங்கனை என தெரிந்ததும், மருத்துவமனை ஊழியர்கள் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் ஏனெனில், விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்து என்று வானதி ஶ்ரீனிவாசன், குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை

முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் அமைந்துள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட தவறான சிகிச்சையால், 17 வயதான கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம். அரசு மருத்துவமனையில் நிலவும் உயிர்காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சிகிச்சைக்கு வந்திருப்பவர் கால்பந்தாட்ட வீராங்கனை என தெரிந்ததும்,மருத்துவமனை ஊழியர்கள் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்து.

எனவே, நாட்டின் சொத்தை பாதுகாக்க தவறியதற்கு, தமிழக அரசும், தமிழக மருத்துவத்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...