திருப்பூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுடன் நடை பயணமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். .



திருப்பூர்: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஏற்கெனவே சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் என அனைவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பழைய ஊதியம் என்றால் என்ன..?

பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு ஊழியர் கடைசியாக பெற்ற ஊதியத்தின் அடிப்படையில், மாதந்தோறும் பெற்றுக் கொள்ளும் ஓய்வூதியம் ஆகும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தில், ஊழியர்கள் ஓய்வு பெறும் போது 60 சதவீத பணி முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும். எஞ்சியுள்ள 40 சதவீத தொகையை ஆனுய்டி திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதன் கீழ் கிடைக்கும் பலன்கள் கூடுதலாக இருக்கும் என்றாலும் அதற்கு உத்தரவாதம் கிடையாது.



100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் போராட்டம்:-

இத்திட்டத்தில் இதுவரை சுமார் ஆறு லட்சம் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாதாந்திர ஊதியம் உள்ளிட்ட ஓய்வூதிய காலப் பலன்கள் இத்திட்டத்தில் இல்லாததால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்ததனர்.

இந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆனால் தற்பொழுது வரை அது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது எனவே தேர்தல் வாக்குறுதி படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் ஆறு லட்சம் குடும்பங்களில் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் வீரபாண்டி பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடை பயணமாக சென்றனர்.



பின்னராக ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...