செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள்: கோவை கருமத்தம்பட்டியில் மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை - தமிழ்நாடு வாணிப கழகம்

சாதி ஒழிப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் நினைவு நாளையொட்டி நாளைய தினம் (17.11.2022) கருமத்தம்பட்டி பகுதியில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு.



கோவை: கோவை மாவட்டம் சோமனூர் அடுத்த செகுடந்தாளி பகுதியை சேர்ந்தவர் சாதி ஒழிப்பு போராளி முருகேசன். அவர் கடந்த 1999ஆம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து ஆண்டுதோறும் நவம்பர் 17ஆம் தேதி அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது நினைவு நாளையொட்டி அன்று ஒரு நாள் அப்பகுதியில் செயல்படும் மதுபான கடைகள் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதன்படி செகுடந்தாளி முருகேசன் நினைவு நாளையொட்டி நாளைய தினம்(17.11.2022) கருமத்தம்பட்டி பகுதியில் செயல்படும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவை தெற்கு மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காரணமாக கருமத்தம்பட்டி பகுதியில் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் 2261, 2270, 1975, 2306, 1821, 1736, 2272 மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு ஒரு நாள் (17.11.2022) விடுமுறை அளிக்கப்படுகிறது.

உத்தரவை மீறி செயல்படும் கடை, பணியாளர்கள் மற்றும் மதுக்கூட உரிமதாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு வாணிப கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...