தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு: வியாபாரிகள் ஏலம் எடுக்க முன்வராததால் 7 டன் தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

கிணத்துக்கடவு சந்தையில் 10 டன் தக்காளி ஏலத்திற்கு வந்த நிலையில், 3 டன் தக்காளியை மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததால், மீதமுள்ள தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டிவிட்டு சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில், கடும் மழையும் பொருட்படுத்தாமல் அறுவடை செய்த தக்காளியை, விவசாயிகள் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்வதற்காக இன்று கொண்டு வந்தனர்.



இந்த நிலையில் காய்கறி சந்தைக்கு வந்த 10 டன் நாட்டு தக்காளியில் மூன்று டன்கள் மட்டுமே வியாபாரிகள் ஏலம் எடுத்ததாகவும், மீதம் இருந்த ஏழு டன் தக்காளியை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.



மேலும் ஒரு கிலோ நாட்டுத் தக்காளியை வியாபாரிகள் ஆறு ரூபாய்க்கு ஏலம் எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உரிய விலை கிடைக்காததால் விற்பனை செய்யக் கொண்டு வந்த தக்காளியை சந்தையில் உள்ள குப்பையில் கொட்டிச் சென்றனர்.

இதனால் காய்கறி சந்தையில் குப்பையில் தேங்கி கிடக்கும் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள தக்காளியால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது..

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...