கோவை மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் தங்கராஜ் சாம்பியன்


கோவை மாவட்ட கேரம் சங்கம் மற்றும் குறிச்சி நண்பர்கள் கேரம் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் கடந்த மூன்று தினங்களாக செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இதில் ஒற்றையர் பிரிவில் 162 அணிகளும் இரட்டையர் பிரிவில் 56 அணிகளும் பங்கேற்றன. இதன் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் தமிழன் கேரம் பயிற்சி மையத்தை சேர்ந்த தங்கராஜ் தன்னை எதிர்த்து விளையாடிய தியாகி சின்னசாமி பயிற்சி மையத்தை சேர்ந்த சுந்தரை 25- 1, 25- 2 என்ற புள்ளியின் அடிப்படையில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

இதேபோல் இரட்டையர் பிரிவில் சுந்தர், மருதாசல மூர்த்தி ஜோடி முதலிடம் பெற்றனர். ஜூனியர் பிரிவில் அகர்ஷ்ன் மூத்தோர் பிரிவில் தேவராஜ் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

இதன் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழில் அதிபர் அரிமா கருணாநிதி வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்.

விழாவில் கோவை மாவட்ட கேரம் சங்கத்தின் சேர்மன் யுவராஜ், தலைவர் குணசேகரன், செயலாளர் தங்கக்குமார், காப்பாளர் பாஸ்கரன், துணை தலைவர்கள் ராமலிங்கம், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...