24 மணி நேர குடிநீர் திட்டப்பணிக்காக கோவை மாநகராட்சிக்கு 'சிறந்த புவியியல்‌ தகவல்‌ பயன்பாட்டு செயலி' விருது

ஹைதராபாத்தில்‌ நடைபெற்ற Geosmart India விருது வழங்கும்‌ விழாவில்‌ கோவை மாநகராட்சிக்கு 24 மணிநேர குடிநீர் திட்டப்பணிக்காக 'சிறந்த புவியியல்‌ தகவல்‌ பயன்பாட்டு செயலி' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ 24 மணி நேர குடிநா்‌ திட்டம்‌ சூயஸ்‌ நிறுவனம்‌ மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது குடிநர்‌ குழாய்‌, மேல்நிலைத்‌ தொட்டி அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்‌ சூயஸ்‌ நிறுவனம்‌ 24 மணி நேர குடிநீர் திட்டத்தில்‌ பல புதிய தொழில்‌ நுட்பங்களை உபயோகப்படுத்தி உள்ளது. இந்த தொழில்நுட்பத்திற்காக ஹைதராபாத்தில்‌ நடைபெற்ற Geosmart India விருது வழங்கும்‌ விழாவில்‌ கோவை மாநகராட்சியில்‌ 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளுக்காக “சிறந்த புவியியல்‌ தகவல்‌ பயன்பாட்டு செயலி” என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த விருதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாபிடம், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, திட்ட மேலாண்மை ஆலோசகர்‌ குழு தலைவர்‌ கோபாலகிருஷ்ணன்‌ ஆகியோர்‌ ஒப்படைத்தனர்‌.

இந்த நிகழ்வில் சூயஸ்‌ நிறுவன திட்ட இயக்குநர் சங்கராம்‌ பட்நாயக்‌, செயலியை உருவாக்கிய சத்யநலம்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...