சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் 51வது பிறந்த நாள் விழா - கோவையில் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம்

கார்த்தி சிதம்பரத்தின் 51வது பிறந்தநாளையொட்டி கோவையில் உள்ள 51 கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதாக தகவல்.


கோவை: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது 51வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி, கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 51 திருக்கோவில்களில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாராதாம்பாள் கோவிலில் கார்த்தி சிதம்பரம் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஹரிஹரசுதன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி கலந்து கொண்டார். மேலும் ஐ.என்.டி.யூ.சி. தொழிற் சங்க தலைவர் கோவை செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதாகவும், அன்னதானம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...