கோவை அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து - பெண் காயம்

கோவை அடுத்த வடவள்ளி பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் பெண் காயமடைந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் இருந்து வடவள்ளி நோக்கி சென்ற அரசு பேருந்து வடவள்ளி பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.



அப்போது தொண்டாமுத்தூரில் இருந்து வடவள்ளி நோக்கி வந்த கார் கட்டுபாட்டை இழந்து, அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன்புறம் பலத்த சேதமடைந்தது.



இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பெண் காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



விபத்து நடந்த பகுதியில் பொதுமக்கள் கூடியதால் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொக்லைன் மூலம் காரை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...