மதுக்கரை அருகே புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

மதுக்கரையில் திருமணமான 11 நாட்களிலே புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தற்போது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.


கோவை: மதுக்கரை முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்த மனோஜ் குமார் என்பவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மர் என்பவரது மகள் முத்துமாரி என்கிற கிறிஸ்டினா ஏஞ்சல் (25) என்பவருக்கும் கடந்த 11 நாட்களுக்கு முன்பு திருமணமானது.

திருமணம் முடிந்து முத்துமாரி மதுக்கரையில் உள்ள தனது கணவர் மனோஜ் குமார் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த முத்துமாரி திடீரென உடலில் மண்ணெண்யை ஊற்றி தீ பற்றவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த முத்துமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தற்போது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணமான 11 நாளில் புதுமண பின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...