குன்னூரில் தனியார் பங்களாவிற்குள் நுழைந்து மேஜை நாற்காளிகளை சேதப்படுத்திய காட்டு மாடு- பொதுமக்கள் அச்சம்

குன்னூரில் உள்ள தனியார் பங்களாவிற்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்து அங்கிருந்த மேஜை நாற்காளிகளை காட்டு மாடு சேதப்படுத்திய நிலையில், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: குன்னூரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் யானை, கரடி போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக குன்னூர் நகரப் பகுதியில் சுற்றி வரும் காட்டு மாடுகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.



இந்நிலையில் குன்னூர் கிளப்ரோடு பகுதியில் உள்ள தனியார் பங்களாவிற்குள் நுழைந்த காட்டுமாடு அங்கு வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த டேபிள், சேர்கள், டீ ப்பாய்களை ஆக்ரோஷத்துடன் சேதப்படுத்தி விட்டு சென்றது.



வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது தங்களை அச்சுறுத்தி வரும் காட்டுமாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...