தமிழக ஆளுநர் மக்களின் நலனுக்காக செயல்படாமல் பாஜக-வின் ஊதுகுழலாக பணியாற்றுகிறார் - திருப்பூரில் துரை வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வுடனான கூட்டணியே தொடரும் என்று திருப்பூரில் பேட்டியளித்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, மதவாத சக்தியை தோற்கடிக்க இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் மாமனிதன் வைகோ என்னும் ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.



மதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு ஆவணப்படத்தை திரையிட்டார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக ஆளுநர் மக்களின் நலனுக்காக செயல்படாமல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஊதுக்குழலாக செயல்பட்டு வருவதாக சாடினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வுடனான கூட்டணியே தொடரும் என கூறியுள்ள துரை வைகோ, மதவாத சக்திகளை தோற்கடிக்க இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தெலங்கானாவில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் தான் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த போது, நாட்டில் தற்போது உள்ள சூழல் மற்றும் அவைகளை முறியடிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்ததாக கூறினார்.



மாமனிதன் வைகோ ஆவணப்பட திரையிடும் நிகழ்ச்சியில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...