கோவை தனியார் கல்லூரியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொள்ளவில்லை - மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் தகவல்

கோவை தனியார் கல்லூரியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி அழைப்பிதழ் ஒன்றில் நடிகர் சூர்யாவின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இது குறித்து மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் நடிகர் சூர்யா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.


கோவை: கோவை நவ இந்தியா கல்லூரியில் ரோட்டரி டெக்ஸ் சிட்டி சார்பில் நடைபெற இருக்கும் யுவ இந்தியா நிகழ்ச்சி அழைப்பிதழில் நடிகர் சூர்யாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

மேலும் அந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கலந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இருந்தும் நடிகர் சூர்யா இந்நிகழ்வில் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து கோவை மாநகர் மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கத்தினர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளனர்.

அந்த அறிக்கையில் உள்ளதாவது:

நடிகர் சூர்யா வரும் 16, 17, 18 தேதிகளில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக விளம்பரம் மற்றும் அறிவிப்புகள் செய்து வருகிறார்கள்.

இது முற்றிலும் தவறான உண்மைக்கு புறம்பான செய்தியாகும். சூர்யா அப்படி எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் என்ற குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...