திருப்பூரில் சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பால் தாக்கரேவின் 10ஆம் நினைவு தினத்தையொட்டி திருப்பூரில் அலங்கரிக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவ படத்திற்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க தலைவர் லோட்டஸ் மணிகண்டன் மலர்தூவி அஞ்சலி.



திருப்பூர்: சிவசேனா கட்சியின் தலைவரான பால்தாக்கரேவின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (17.11.2022) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் தொண்டர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் பால் தாக்கரேவின் 10 ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.



இதனையொட்டி, திருப்பூரில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்வில், ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் கலந்து கொண்டு, பால் தாக்கரேவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



இந்த நிகழ்வில், சிவசேனா மற்றும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...