கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலம் டாக்ஸி புக் செய்யும் மையம் திறக்கப்படும் - ரயில்வே வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் தகவல்

கோவை ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட குளிசாதன அறையை திறக்க வந்த ரயில்வே வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் செயலி மூலம் ஆட்டோ புக் செய்யும் பயணிகளுக்கு வசதியாக ரயில் நிலையத்தின் பின்புறம் அனுமதி வழங்க சிறப்பு மையம் திறக்கப்படும் என தெரிவித்தார்.



கோவை: சென்னைக்கு அடுத்தப்படியாக ரெயில்வேக்கு அதிகமான வருவாயை ஈட்டி தருவது கோவை இரயில் நிலையமாகும். கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் புதிய நவீன குளிர்சாதன காத்திருப்போர் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 என்ற கட்டணத்தை செலுத்தி பயணிகள் காத்திருக்க வசதி செய்யப்பட்டுள்ளது.



இந்த நவீன குளிர்சாதன அறையை கோவை ரயல்வே முதன்மை கோட்ட வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் திறந்து வைத்தார்.



இது குறித்து முதன்மை கோட்ட வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறும் போது:

பயணிகள் வசதிக்காக கட்டண முறையில் குளிர்சாதன அறை அமைக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் அதிக பயணிகள் வருவதால் முதல் நடைமேடையில் இந்த அறை ரூ.12 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் பக்தர்கள் வசதிக்காக இந்த அறையை பயன்படுத்தி கொள்வார்கள். நவீன முறையில் அமைந்துள்ள அறையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.



மேலும் கோவை ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளுக்கு நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலம் டாக்ஸி புக் செய்யும் மையம் உள்ளது. பார்க்கிங் வசதி இல்லாததால் ரயில் நிலையத்தின் பின்புறம் செயலி மூலம் ஆட்டோ புக் செய்ய வசதி ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...